M.H.ஜவாஹிருல்லாஹ்

பேராசிரியர்

M.H. ஜவாஹிருல்லாஹ்

அவர்களின் முழு வாழ்க்கை குறிப்பு

பிறந்த நாள் : 22.07.1959
இடம் : காலன் குடியிருப்பு; தூத்துக்குடி மாவட்டம்

பெற்றோர் : ஆ.M. ஹிதாயத்துல்லாஹ்; காத்தூன் ஜன்னாஹ்

மொழிகள் : தமிழ்; ஆங்கிலம்

பள்ளி படிப்பு: செயின்ட். மேரி ஆங்கிலோ இந்திய பள்ளி, சென்னை

பட்டப்படிப்பு

B. Comஇளங்களை வணிகவியல், புதுக்கல்லூரி, சென்னை

M.B.A —  முகலை வணிக நிர்வாகம், சென்னை பல்கலை கழகம், சென்னை

M. Phil — ‘Effectiveness of Advertising over the Web’ எனும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம்

‘ Performance Evaluation and Assessment of Service Quality in Islamic Banks “ எனும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம்

பணி விபரம்

1985 முதல் 2009 வரை, வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில், பேராசிரியராக (Corporate Secretaryship) பணியாற்றியதுடன், சென்னை புதுக்கல்லூரியில், முதுகலை வணிக நிர்வாக மாணவர்களுக்கு நிர்வாகவியல் பிரிவு பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

பொதுத் தொண்டு

மாணவர் பருவத்திலிருந்தே, சிறுபான்மையினரின் உரிமைகளை உள்ளடக்கிய மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பவராகவும்; இஸ்லாமிய கூறுகள் குறித்து உரையாற்றுபவராகவும், தமிழகமெங்கும் சுற்றி வந்துள்ளார். இஸ்லாமிய பிரச்சாரத்திற்காகவும்; அனைவரிடமும் சமூக நல்லிணக்கம் தழைத்தோங்கவும், பேரிடர் காலங்களில் களத்தில் நின்று பணியாற்றுபவராகவும் இருந்து வருகிறார்.

எழுத்தாளராக

பிரச்சாரகராக மட்டுமல்லாமல், சிறந்த பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். அவற்றுள் முக்கியமானவை:
1. பாலஸ்தீன வரலாறு
2. வரலாற்றின் பார்வையில் … பாபரி பள்ளியா ? ராம ஜன்ம பூமியா ?
3. தித்திக்கும் திருப்புமுனைகள் ( இஸ்லாத்தை தழுவியோரின் அனுபவங்கள் )
4. இந்திய சூழலில் பலதார மணம் குறித்த நீதிமன்ற தீர்ப்புகள் மீதான விமரிசனங்கள்

இவை தவிர, ரியா (மறைமுக இணைவைப்பு); 40 ஹதீஸ் குத்ஸி போன்றவை உள்ளிட்ட பல நூல்களையும், கட்டுரைகளையும் ஆங்கிலத்திலிருந்து அழகு தமிழுக்கு மொழியாக்கம் செய்துள்ளார்.

அரசியல் தடம்

1995 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இஸ்லாமிய பேரியக்கமான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 1996 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமுமுக அதிகமுறை இரத்த தானத்திற்கான விருதுகளையும், குறிப்பாக அவசரகாலங்களில் பெரும் அளவில் குருதிக் கொடை அளித்ததற்காகவும் சிறப்பு விருதுகளைப் பெற்றுள்ளது.

இந்தியா டுடே வில் “சிங்கம் 15”

( 15 அரசியல் ஆளுமைகளுக்கு வழங்கப்பட்ட ) விருதினைப் பெற்றுள்ளார்.

தமிழகத்தில் 160 க்கும் அதிகமான அவசர ஊர்தி (ஆம்புலன்ஸ்) களைக் கொண்டிருக்கும் ஒரே தன்னார்வ அமைப்பு தமுமுக

இயற்கை பேரிடர்களின் போது தமுமுக தன்னார்வலர்களின் சேவை அனைத்து சமூக மக்களிடமும் நல்லிணக்கத்தை உருவாக்கியத்துடன், ஜாதி மதம் கடந்து அனைவரும் தமுமுகவை வெகுவாக பாராட்டினர்.

சுனாமியின் போது, களத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் முதன்மையாக செயலாற்றியது தமுமுக.

தமுமுகவின் மார்க்கப்பிரிவான இஸ்லாமிய பிரச்சார பேரவை, இஸ்லாத்தை தூய வழியில் பிரச்சாரம் செய்து வருவதுடன், இஸ்லாத்தை ஏற்கும் பிற சமய சகோதரர்களுக்கு பயிற்சியும் அளித்து வருகின்றது.)

அகில இந்திய தனிநபர் சட்ட வாரியத்தில் உறுப்பினராக இருக்கிறார்.

மே 2003 இல், ஐநா ஜெனிவாவில் நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின், 9 ஆவது சிறுபான்மையினர் செயற்குழு அமர்வில், இந்தியாவில் சிறுபான்மையினர் நிலை குறித்த இரு ஆங்கில அறிக்கைகளை வாசித்தளித்தார்.

2007 டிஸம்பரில், அன்றய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை சந்திது, பாபர் மஸ்ஜித் குற்றவாளிகளின் வழக்கை துரிதப்படுத்த வேண்டுகோள் விடுத்தார்

இலண்டனிலிருந்து செயல்படும் UNIVERSAL JUSTICE NETWORK எனும் அமைப்பின் அழைப்பில், ஜூன் 2009 இல் இங்கிலாந்து நாட்டில் உரையாற்றியுள்ளார்.

மனித உரிமை; சிறுபான்மையினர் உரிமைகள் மற்றும் தேசிய பிரச்சனைகள் குறித்த பல தொலைகாட்சி விவாதங்களில் பங்கேற்றுள்ளார்.

இலஞ்ச ஊழலற்ற சட்டமன்ற உறுப்பினராக 2012 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டு, “திருவள்ளுவர் நேர்மை அரசியல் விருதினைப்” பெற்றுள்ளார்.