பேராசிரியரின் MHJ வின்  சட்டமன்ற செயல்பாடுகள் (2011-2016)
பேராசிரியரின் MHJ வின் சட்டமன்ற செயல்பாடுகள் (2011-2016)

சட்டமன்றத்தில் சமுதாயத்தின் குரல் – MHJ

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்க வேண்டும – ஆளுநர் உரைக்கு நன்றி — MHJ சிறுபான்மை மக்களுக்கென தனியாக மருத்துவக்கல்லூரி தொடங்க சட்டசபையில் மமக கோரிக்கை

முஸ்லிம்களுக்கு இடஓதுக்கீடு அதிகரிக்க வேண்டும் – சட்டசபையில் ம.ம.க. கோரிக்கை
நிதி நிலை அறிக்கை குறித்த விவாதத்தின் போது எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும – சிறுபான்மையினர் நலத்
துறை மானியக் கோரிக்கையின் போது முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ

ஓரியன்டல் அரபிக் பள்ளிக்கூடங்களின் தனித்தன்மை பாதுக்காக்கப்பட
வேண்டும்: உயர் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கையின் போது  முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ

இராமநாதபுரம் பாதாளச் சாக்கடைத் திட்டம் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற
வேண்டும் சட்டபேரவையில் முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. வலியுறுத்தல

10 ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும்: சிறைத்துறை
மானியக் கோரிக்கையின் போது முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் ஆற்றிய உரை

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மீன்வளத் துறை, காலநடை பராமரிப்பு மற்றும்
பால்வளத் துறை மானியக் கோரிக்கையின் போது முனைவர் எம். எச். ஜவாஹிருல்லாஹ் ஆற்றிய உரை

அருந்ததியர் மக்களுக்கான தனி இடஒதுக்கீடு பாதுகாக்கப்பட வேண்டும் – சட்டபேரவையில்
முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ.

ஹஜ் ஹவுஸ் கட்டுவதற்கு அரசு முன்வருமா? – பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்களின்
கேள்வியும், அமைச்சரின் பதிலும்…

பட்டா நிலங்களில் பள்ளிவாசல் சர்ச் கட்ட உள்ள முட்டுகட்டைகள் நீக்கப்பட
வேண்டும்

முல்லை பெரியாறு அணை விவகாரம் – சட்டபேரவையில் மமக தலைவர் ஆற்றிய உரை

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரித்து தர சட்டசபையில் பேரா. ஜவாஹிருல்லாஹ்

நவீன இறைச்சி கூடங்களில் ஹலால் முறையில் அறுப்பு நடைபெற வேண்டும

மமக கருத்தை ஏற்று அமைச்சரின் உரையை திருத்திய முதலமைச்சர்.

சிறுபான்மை பள்ளிகளில் உள்ள 5,000 ஆசிரியர் பணியிடங்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும்

உருது பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சட்டசபையில் உயர்கல்வி மானியக் கோரிக்கையில் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் கோரிக்கை

சிறைவாசிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கவும், சிறைத்துறை பணியிடங்களை நிரப்பவும் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் கோரிக்கை

திருமணப் பதிவுச் சட்டத்தில் முஸ்லிம்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்

பதிவு செய்யாத வக்புகளை கட்டாயமாக பதிவு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க எம்.எச். ஜவாஹிருல்லாஹ் வலியுறுத்தல்

காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அனைத்துகட்சிகளும் முன்வர வேண்டும்  — எம்.எச். ஜவாஹிருல்லாஹ்


இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு நிரந்தரமாக ஒரு நியூரோ சர்ஜன் மற்றும் நரம்பியல் மருத்துவரை நியமிக்க அரசு ஆவன செய்யவேண்டும்.


இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பழுதாகியுள்ள ஸ்கேன்  கருவிக்கு பதிலாக புதிய ஸ்கேன் கருவி அளிக்க வேண்டும். டிராமா கேர் வசதி செய்து தரப்பட வேண்டும்

இராமநாதபுரம் நகரத்தில் கீழக்கரைச் செல்லும் சாலையில் உள்ள இரயில்வே கடவு அமைந்துள்ள இடத்தில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அங்கு ஒரு


மேம்பாலம் (சுழுடீ) கட்டப்பட வேண்டும்  — எம்.எச். ஜவாஹிருல்லாஹ் .

பிரேத பரிசோதனை – ஆண் சடலங்களுக்கு ஆண் மருத்துவர்களும் பெண் சடலங்களுக்கு
பெண் மருத்துவர்களும் பரிசோதனை நடத்த எம்.எச். ஜவாஹிருல்லாஹ் சட்டப்பேரவையில் கோரிக்கை

பன்றிக்காய்ச்சலுக்கு சித்த மருத்துவத்திலும் சிகிச்சை அளிக்க அரசு முன்வர வேண்டும்

500 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கான கட்டணம் குறைக்கப்பட வேண்டும்

முத்திரைத் தாள் விற்பனையாளர்களுக்கு கூடுதல் கமிஷன், தகவல் பெறும் உரிமை சட்டம் —

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்த கவன ஈர்ப்பு விவா தத்தில் எம்.எச். ஜவாஹிருல்லாஹ்


35.65 கோடி ரூபாய் செலவில் நாகப்பட்டிணத்திலும் 27.56 கோடி ரூபாய் செலவில் பழையாற்றிலும் நவீன மீன்படி துறைமுகங்கள் அமைக்க நடவடிக்கை


• 75 கோடி ரூபாய் செலவில் பும்புகாரிலும் இராமேஸ்வரத்திற்குத் தெற்கிலுள்ள மூக்கையுரிலும் மீன் படித் துறைமுகங்களை அமைக்கும் திட்டம்
• சூரை மீன்பிடி தூண்டில் படகுகள் வாங்குவதற்கு 25 விழுக்காடு மானியத்தில் ஐந்து லட்சம் வரை மீனவர்களுக்கு நிதியுதவி திட்டம்
• மீன் பிடி அல்லாத காலங்களில் மீனவக் குடும்பம் ஒன்றுக்கு 4000 ரூபாய் சிறப்பு உதவி தொகை

மிதவைகள் அமைப்பதையும், கடற்கரையோரம் தொழிற்சாலைகள் அமைப்பதையும் கை விட வேண்டும்


மீனவர்களுக்கு சிங்காரவேலர் தொகுப்பு வீடுகள் கட்டித் தர வேண்டும்

அருந்ததியர் மக்களுக்கான தனி இடஒதுக்கீடு பாதுகாக்கப்பட வேண்டும்

நெய்வேலி மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கு வேண்டும்


இராமநாதபுரத்தில் நடுக்கடலில்  மீன் பதப்படுத்தும் கப்பல் பூங்கா உருவாக்க வேண்டும்

கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்கு வாபஸ் பெறப்பட வேண்டும்


செயற்கையாக கடற்பாசியை வளர்க்க ஊக்கம் அளிக்க வேண்டும். கடற்பாசிகளை அரசாங்கம் நேரடியாகவே கொள்முதல் செய்ய வேண்டும் – மீன்வளத் துறை மற்றும் சுற்றுலாத்துறை மனிய விவாதத்தில் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் கோரிக்கை

இராமேஸ்வரத்தில் ஒருங்கிணைந்த வணிக வளாகம் அமைக்க மமக கோரிக்கை

இராமநாதபுரத்திற்கு தனியாக துணை மின் நிலையம் அமைக்க எம்.எச். ஜவாஹிருல்லாஹ் கோரிக்கை


இராமேஸ்வரம் தீவை சுற்றிப் பார்க்க சுற்றுலாத் துறை மூலம் குறைந்த கட்டணத்தில் மினி பஸ் வசதி செய்யப்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.


பாம்பன் குந்துகால் விவேகானந்தர் மணிமண்டபம் அருகில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.


குருசடை தீவில் ஆய்வுக்கூடம் மீண்டும் செயல்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். 


சுற்றுலாத் துறை மூலம் படகு வசதி செய்து தரப்பட வேண்டுமனு கேட்டுக் கொள்கிறேன்.


பாம்பன் பால கடற்கரைப் பூங்காவை சீரமைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.


அரியமான் கடற்கரைக்குச் செல்லும் வழியில் உள்ள ஆளில்லா இரயில் கதவு, உள்ளது. தமிழக அரசு இரயில்வே நிர்வாகத்திடம் எடுத்துரைத்து (ஆள் பராமரிப்பு இரயில் கதவு) அமைக்கப்பட வலியுறுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

அரியமான் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக புதிய கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி செய்து தரப்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். 

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக புறக் காவல் நிலையம் அமைக்கப்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
சுற்றுலாத் தலமான சேதுக்கரைக்கு திருப்புல்லாணியிலிருந்து நேரடி பேருந்துகள் இயக்கப்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இராமநாதபுரம் தொகுதி எஸ்.மடை பழப்பண்ணை சனி, ஞாயிறு விடுமுறையை மாற்றி வேறு நாட்களில் விடுமுறை அளித்தால் சுற்றுலாப் பயணிகள் பயனடைவர்.
இராமநாதபுரம் தொகுதியில் புதுமடத்தில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக கடல்சார் ஆய்வு மையத்தில் படகுத்துறை கட்ட அரசு முன்வர வேண்டுமென்று கேட்டுக்
கொள்கிறேன்.
இராமநாதபுரம் தொகுதி மண்டபம் ஆற்றுவாய் பகுதியில் உள்ள பாறைகளினால் விசைப் படகுகள் மோதி சேதமடைகின்றன. இதனைத் தடுப்பதற்காக பாறைகளை
உடைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இராமநாதபுரம் தொகுதி சீனியப்பா தர்ஹா பகுதியில் கடல் அரிப்பு பெரிய அளவில் ஏற்பட்டு குடியிருப்புவரை வந்துவிட்டது. எனவே அங்கே உடனடியாக தடுப்புச் சுவர் ஏற்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
வண்ணான்குண்டு முஸ்லிம் குடியிருப்பில் நியாய விலை கடை அமைத்துத்தர மமக எம்.எச். ஜவாஹிருல்லாஹ் கோரிக்கை

இராமேஸ்வரத்திலிருந்து பெங்களுருக்கு குளிர்சாதன விரைவுப் பேருந்து இயக்க எம்.எச். ஜவாஹிருல்லாஹ் கோரிக்கை

ஏழை மக்களுக்கு பட்டா வழங்குவதற்கு எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கோரிக்கை
TAMCO மூலம் கடன் பெறுவதை எளிமையாக்க வேண்டும

* உச்சிப்புளி புறக்காவல் நிலையம் ஏற்பாடு செய்ய இயலாத நிலையில், இடைக்கால ஏற்பாடாக, தொடர் ரோந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது

* 2004 இலேயே, கீழக்கரை மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டபோதும், தனி ஆணையர் நியமிக்கப்படாத நிலையில் தொடர் அழுத்தம் காரணமாக 2015 இல் ஆணையர் நியமிக்கப்பட்டார்.

* இராமேஸ்வரம் ரதவீதிகளில் கழிப்பறை; குடிநீர் வசதி, ஓய்வெடுக்க நிழற்கூடம் போன்றவை அமைக்கப்பட்டன

* இராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரியில், விடுபட்ட முக்கிய பாடப்பிரிவுகளை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது

* பாம்பன் அரசு உயர்நிலைப்பள்ளி, மேனிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதுடன், நபார்டு வங்கி நிதிக்காக குரல் கொடுத்துத்தார். காலம் தாழ்த்தி கிடைக்கப்பெற்ற நிதியால் உருவான கட்டிடத்தை திறக்க, இன்று சட்டமன்ற உறுப்பினராக இல்லாத நிலையிலும், பேராசிரியரை அழைத்து திறப்பு விழாவை பள்ளி நிர்வாகம் நடத்தியது

* உத்திரகோசமங்கை அரசு உயர்நிலைப்பள்ளி, மேனிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதுடன், உத்திரகோசமங்கை கோவில் முகப்பு உயர்த்தப்பட்டு அலங்கார கற்கள் பதிக்கப்பட்டன. மேலும், பத்திரப்பதிவு அலுவலகம் ஏற்படுத்தப்பட்டது.

* வழுதூர் — பெரியபட்டிணம் சாலை; உத்திரகோசமங்கை — பிரப்பன்வலசை சாலை; உச்சிப்புளி — புதுமடம்  சாலை போன்ற சாலைகள் அமைத்துக் கொடுத்துள்ளார். குறிப்பாக உச்சிப்புளி — புதுமடம்  சாலைக்காக சட்டசபையில் இருமுறை விவாதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

* சக்கரக்கோட்டை கண்மாய் கசிவு காரணமாக தொடர்ந்து பழுதடைந்து வந்த கீழக்கரை சாலையை முறையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய சாலை அமைத்துக் கொடுத்தார்.

* பெரியபட்டிணத்திலுள்ள கோட்டைக்குப்பம் ஊரணியில் தேங்கிய குப்பகளை அகற்றி அழகுபடுத்தினார்

* திருப்புல்லானி ஒன்றியத்தில் கட்டி முடிக்கப்படாமலிருந்த 110 சுனாமி குடியிருப்புகளை கட்டி முடித்துக் கொடுத்தார்

* தினைக்குளம் அரசு மேனிலைப்பள்ளியின் சுற்றுச்சுவரை, ஒப்பந்தகாரர் சரியான கலவையில் கட்டாததால், இடித்துவிட்டு, புதிய சுவர் கட்ட உத்தவிட்டார்.

* இராமேஸ்வரத்தில் அரசு கலைக்கல்லூரி அமைத்துக் கொடுக்கப்பட்டது

* மண்டபம் வடக்கு கடல் ஆத்துவாயை ஆழப்படுத்தும் பணி நிறைவேற்றப்பட்டது

* கீழக்கரை சாலை ரயில்வே மேம்பாலம் கட்டிக் கொடுக்கப்பட்டது

* செங்கல்நீரோடையில் அரசு தொடக்கப்பள்ளி உருவாக்கப்பட்டது

* கல்வி வளர்ச்சிப்பணிக்காக மாத்திரம், 3 கோடியே, 40 இலட்சம் செலவிடப்பட்டது

* தனுஷ்கோடிக்கு சாலை, போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. 50 வருட வரலாற்றில், மக்கள் குறை கேட்க வந்த முதல் Mளா என கிராம தலைவர் மாரி குறிப்பிட்டது நினைவு கூறத்தக்கது

* மதுரை — ராமேஸ்வரம் — மதுரை; ராமேஸ்வரம் — திருச்சி — ராமேஸ்வரம் இரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க குரல் கொடுத்து சாதித்தது மட்டுமல்லாமல், மதுரை — திருப்பதி இரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டித்துக் கொடுத்தது

* மீனவர்களுக்காக தொடர்ந்து சட்டமன்றத்தில் குரல் கொடுத்தது