மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து!!
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் வாழ்த்து செய்தி:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள தோழர் டி. ராஜா அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
டி. ராஜா கடந்த 23 வருடங்களுக்கும் மேலாக கட்சியின் தேசிய செயற்குழுவில் முக்கியப் பங்காற்றுவதோடு மட்டுமில்லாமல் மாநிலங்களவை உறுப்பினராகவும் சமரசமில்லாமல் பணியாற்றியவர்.
நூற்றாண்டைக் கடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரான தோழர் டி. ராஜா தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஜனநாயகம், அரசியல் சாசன சட்டம், சமூகநீதி, சமூக நல்லிணக்கம் போன்றவற்றைக் காக்க மேலும் வலுவாக செயல்படும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது நம்பிக்கையை வெளிப்படுத்தி வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவண்
எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.
தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி